News August 3, 2024
“ஸ்டாலின் அமெரிக்க பயண ரகசியம்: ஆண்டவரே அறிவார்”

ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்லும் ரகசியத்தை ஆண்டவரே அறிவார் என, ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, சென்னையிலுள்ள சிலைக்கு இன்று மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, “தொழிற்சாலைகளை ஈர்க்க வெளிநாடு செல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஸ்டாலின் பயணத்தின் உண்மையான நோக்கமும், மறைமுக ரகசியமும் ஆண்டவருக்கே வெளிச்சம்” என்றார்.
Similar News
News November 28, 2025
கடலூரில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து- ஆட்சியர்

கடலூர் முதுநகரில் உள்ள சரக்கு துறைமுகத்தின் மூலம் உற்பத்திப் பொருட்களை இலங்கைக்கு எளிதில் கொண்டும் செல்லும் வகையில் புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்கப்பட உள்ளது. மேலும், பொதுமக்கள் வந்துசெல்லும் பொருட்டு அவர்களுக்கு தேவையான உணவுக்கூடங்கள், ஓய்வறைகள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
News November 28, 2025
எயிட்ஸுக்கு தடுப்பூசி… விரைவில் இந்தியாவில்!

100% செயல்திறன் கொண்ட எயிட்ஸ்(HIV) தடுப்பூசி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. USA-வின் கிலீட் சயன்சஸ் நிறுவனத்தின் இந்த தடுப்பூசி, FDA அங்கீகாரம் பெற்றுவிட்டது. இந்நிலையில் அதன் உரிமம் பெற்று இந்தியாவில் lenacapavir என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படவுள்ளது. ஆண்டுக்கு 2 முறை இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் போதும். HIV தொற்று தாக்கும் ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமையும்.
News November 28, 2025
இதெல்லாம் கூடிய சீக்கிரமே நடக்கப்போகுது..

தற்போது சாத்தியமில்லை எனக் கூறப்படும் இந்த விஷயங்கள் வருங்காலத்தில் சாத்தியமாகலாம். ➤ரூபாய் நோட்டுகள் பயன்பாடே இல்லாமல் போகலாம் ➤மனிதர்கள் 100 வயதை கடந்தும் வாழ்வர் ➤பலரின் நெருங்கிய நண்பனாக AI இருக்கும் ➤போனின் சார்ஜ் பல ஆண்டுகள் நீடிக்கலாம் ➤Mars-ல் மனிதர்கள் நடமாடலாம் ➤வீட்டுக்கு ஒரு ரோபோ இருக்கும் ➤வின்வெளியில் டூர் அடிப்பது சாதாரணமாகிவிடும். இதில் எதை பார்க்க நீங்கள் ஆவலுடன் இருக்கீங்க?


