News April 8, 2025
ஜெயலலிதா தவறவிட்டதை சாதித்து காட்டிய ஸ்டாலின்..!

முதல்வரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாற்றவும், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கும் அதிகாரமளிக்கும் தீர்மானங்கள் ஜன. 5 1994-ல் அப்போதைய CM ஜெயலலிதாவால் TN சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்க அப்போதைய கவர்னர் சென்னா ரெட்டி மறுத்துவிட்டார். அதே தீர்மானங்களை 2022-ல் நிறைவேற்றிய CM ஸ்டாலின், சட்டப் போராட்டம் நடத்தி கோர்ட் மூலம் அந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.
Similar News
News October 24, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

கடந்த 2 நாளாக தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹11,540-க்கும் சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹ 92,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை உயர்ந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News October 24, 2025
கோர விபத்தில் 25 பேர் பலி.. பிரதமர் மோடி இரங்கல்

ஆந்திராவில் சொகுசு பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் PMNRF-லிருந்து ₹2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
News October 24, 2025
WORLD CUP: புதிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை

நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக, பிரதிகா ராவல் 122(134) ரன்களை விளாசியது மட்டுமின்றி, 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம், இந்திய பெண்கள் அணிக்காக உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் சதம் & விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை பிரதிகா படைத்துள்ளார். நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக வெற்றி பெற்று இந்திய பெண்கள் அணி, தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.


