News November 19, 2024

22 பேர் கொண்ட இலங்கையின் புதிய அமைச்சரவை!

image

இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக்கொண்டது. அதிபர் அநுர குமார திசநாயக தலைமையிலான அமைச்சரவையில் அவர் உட்பட 22 பேர் இடம்பெற்றுள்ளனர். நிதி, பாதுகாப்பு, திட்டம் மற்றும் டிஜிட்டல் ஆகிய துறைகள் அதிபர் வசம் உள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூர்யாவுக்கு கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. கடல்தொழில் நீரியல் வழங்கல் துறை அமைச்சராக தமிழரான ராமலிங்கம் சந்திரசேகரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Similar News

News November 19, 2024

ஹிந்தி, ஆங்கிலத்தில் LIC இணையதளம் மாற்றம்

image

அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, LIC இணையதளம் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹிந்தி மொழி மட்டுமே இருந்ததாகவும் LIC விளக்கமளித்துள்ளது. முதலில் மொழித்தேர்வில், ஆங்கிலமும் ஹிந்தியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மொழித்தேர்வில் English என மாற்றப்பட்டுள்ளது. எனினும், முகப்பு பக்கம் ஹிந்தியிலேயே இருக்கிறது.

News November 19, 2024

எல்லாம் பொய்.. நயன் மீது தனுஷின் தந்தை பாய்ச்சல்

image

திருமண ஆல்பத்தில் “நானும் ரவுடிதான்” பட காட்சியை பயன்படுத்த அனுமதி கேட்டு 2 ஆண்டுகள் காத்திருந்ததாக தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர் என்றும் சாடியிருந்தார். இதற்கு தனுஷ் இதுவரை பதில் அளிக்காத நிலையில், அவரின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா பதில் அளித்துள்ளார். நயன் சொல்வது எல்லாம் பொய் என தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல்

image

அமெரிக்க ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால், அணு ஆயுதங்களை பிரயோகிக்க தனது ராணுவத்திற்கு, ரஷ்ய அதிபர் புதின் அனுமதி அளித்துள்ளார். அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அந்நாடு அனுமதி அளித்துள்ளது. இதனால் போர் தீவிரமடையும் என எச்சரித்துள்ள புதின், உக்ரைன் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று, போர் தொடங்கிய 1,000வது நாளான இன்று, அதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.