News April 23, 2025
தடுமாறி மீண்ட SRH அணி

இன்றைய IPL போட்டியில், SRH அணியை மிகக் குறைந்த ரன்களில் கண்ட்ரோல் செய்து அசத்தியிருக்கிறது MI. முதலில் பேட்டிங் செய்த SRH அணியின் முதல் நான்கு வீரர்கள் 0, 8, 1, 2 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கிளாசன் (71), அபினவ் (43) ஆகியோரின் அதிரடியால், அந்த அணி 20 ஓவர்களில் 143/8 ரன்கள் என்ற கௌரவமான நிலையை எட்டியது. MI அணியின் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Similar News
News August 17, 2025
யார் பாமக தலைவர்: ராமதாஸா? அன்புமணியா?

விழுப்புரத்தில் இன்று(ஆக., 17) நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும், நிறுவனரும் ராமதாஸ் தான் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆக., 9-ல் மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இன்னும் ஓராண்டுக்கு அன்புமணி தான் தலைவர் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் தான்தான் தலைவர் என தீர்மானம் நிறைவேற்றுவதால் பாமகவினர் குழப்பத்தில் உள்ளனர்.
News August 17, 2025
அன்புமணியின் நியமனங்கள் செல்லாது: ராமதாஸ்

அன்புமணி மேலும் ஓராண்டுக்கு பாமக தலைவராக செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றியது செல்லாது என, ராமதாஸ் தலைமையிலான சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணியால் நியமிக்கப்பட்ட பதவி நியமனம், அறிவிப்புகள் செல்லாது என்றும், ராமதாஸால் நியமிக்கப்பட்டவர்கள் அப்படியே தொடர்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
போன் செய்தபோது இறப்பு செய்தி: கண்கலங்கிய ஸ்டாலின்

பிறந்தநாள் வாழ்த்து கூற போன் செய்தபோது, சின்னம்மா மறைந்துவிட்டார் என்ற செய்தியை வேதனையுடன் விசிக தலைவர் திருமா சொன்னதும், ‘கண்கள் கலங்கினேன்’ என்று CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சிற்றன்னையின் மீதான அவரது பாசப்பிணைப்பையும், அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கும் வேதனையையும், அவரது (திருமா) உள்ளத்தில் நிறைந்திருந்த சோகத்தையும் நினைத்து துயரம் அடைந்தேன் என உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.