News April 25, 2025
SRH-க்கு 155 ரன்கள் இலக்கு

SRH-க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த CSK, 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆயுஷ் மாத்ரே (30), டெவால்ட் பிரெவிஸ் (42) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு விளையாடினர். ரஷீத், தோனி, துபே உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். SRH அணியின் பேட்டிங் லைன் அப் வலுவாக இருப்பதால், இந்த இலக்கு போதுமானதாக இல்லை. பேட்டிங்கில் சொதப்பிய CSK, பவுலிங்கில் ஜொலிக்குமான்னு பார்ப்போம்.
Similar News
News February 7, 2026
திமுகவில் இருந்து 2,000 பேர் விலகினர்.. ஸ்டாலினுக்கு ஷாக்

கிருஷ்ணகிரி நகராட்சியின் Ex சேர்மன் பரிதா நவாப் தனது ஆதரவாளர்கள் 2,000 பேருடன் அதிமுகவில் இணைந்தார். அதில் பெரும்பாலானோர் சிறுபான்மையினர் என்பதால் அதிமுக தலைமை மகிழ்ச்சி அடைந்துள்ளது. டெல்டா, தென் மாவட்டங்களில் அதிமுக Ex MLA-க்கள் பலரை திமுக தங்கள் வசம் இழுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் திமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களை EPS, அதிமுகவில் சேர்த்து வருகிறார்.
News February 7, 2026
பிரேமலதா போடும் டீலிங் தான் என்ன? ஏன் இழுபறி?

2009 லோக்சபா தேர்தலில் கிடைத்த சுமார் 10% வாக்குகளை முன்வைத்து, தற்போது இரட்டை இலக்கத்தில் தேமுதிக தொகுதிகளை கேட்கிறது. ஆனால், அதன் பிறகான தேர்தல்களில் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டியே திமுகவும் அதிமுகவும் ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகளை ஒதுக்க முன்வருகின்றன. தவெக கூட்டணியிலும் முக்கிய கட்சிகள் இணையவில்லை என்பதால் தேமுதிக கூட்டணி இழுபறி நிலையிலேயே இருந்துவருகிறது.
News February 7, 2026
பாஜகவின் முரட்டு அடிமை EPS: உதயநிதி

முரட்டு பக்தர்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், முரட்டு அடிமைகளைப் பார்த்திருக்கிறீர்களா என DCM உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவுடைய முரட்டு அடிமையாக தற்போது EPS திகழ்வதாக கூறிய அவர், அதனால்தான் மத்திய பட்ஜெட்டை அவர் வரவேற்றிருக்கிறார் எனவும் கூறியுள்ளார். மேலும், இப்படி எத்தனை அடிமைகள் வந்தாலும் நிச்சயம் வரும் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் எனவும் பேசியுள்ளார்.


