News August 8, 2024
வெண்கலப்பதக்கத்துடன் ஓய்வு பெற்றார் ஸ்ரீஜேஷ்

உலகின் சிறந்த ஹாக்கி கோல் கீப்பர்களில் ஒருவராக அறியப்படும் ஸ்ரீஜேஷ், வெண்கலப்பதக்கத்துடன் ஓய்வு பெற்றார். கேரளாவைச் சேர்ந்த அவர், இதுவரை இந்திய அணிக்காக 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். 2014 சாம்பியன்ஸ் கோப்பை, 2018 சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் சிறந்த கோல் கீப்பருக்கான விருதை வென்ற அவர், தற்போது இந்திய இளையோர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News February 19, 2026
புதுவை: விவாகரத்து கேட்ட கணவருக்கு கொலை மிரட்டல்!

புதுவை, மூலக்குளம் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). அவரது மனைவி கிரிஜா. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். கார்த்திகேயன் விவாகரத்து வேண்டி வழக்கு தொடர்ந்தார். இதனால் கிரிஜா, கார்த்திகேயனுக்கு போன் செய்து திட்டி தன்னுடன் வாழவில்லை என்றால் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 19, 2026
தஞ்சாவூர்: போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவும்.
News February 19, 2026
BIG FLASH: தங்கம் விலை ஒரே அடியாக மாறியது

சர்வதேச சந்தையில் கடந்த 3 நாள்களாக சரிந்து வந்த தங்கம் விலை ஒரே அடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸுக்கு(28g) $91 அதிகரித்து $4,979-ஆக உள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் $3 அதிகரித்து $77-ஆக உள்ளது. இதனால் இந்திய சந்தையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. சென்னையில் கடந்த 3 தினங்களாக சவரனுக்கு ₹2,640 விலை குறைந்தது கவனிக்கத்தக்கது.


