News April 15, 2025
PM மோடியின் பதிவில் எழுத்துப்பிழை!

PM மோடிக்கு தமிழ் மீது தீவிர பற்றுள்ளதாக தொடர்ந்து பாஜகவினர் அனைத்து இடங்களிலும் பேசி வருகின்றனர். ஆனால், அவரின் தமிழ் பதிவில், எழுத்துப்பிழை இருப்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து விமர்சிக்கின்றனர். விஜயகாந்த் குறித்த PM-ன் சமீபத்திய பதிவில், ‘கூர்கிறார்கள்’ (கூறுகிறார்கள்) என பதிவிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, ‘அட்மின் சார்.. PM போஸ்ட்ல கொஞ்சம் கரெக்ட்டா டைப் பண்ணுங்க’ என விமர்சித்து வருகின்றனர்.
Similar News
News January 14, 2026
குமரி: பைக் மோதி பெண் பலி

திங்கள்சந்தை அருகே வாடிவிளையைச் சேர்ந்தவர் மேரி ஜெனட்(50). இவர் அந்தப் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் தலையில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 14, 2026
Cinema Roundup: ‘போர்’ முரசு ஒலிப்பாரா தனுஷ்?

*அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள ‘வித் லவ்’ படத்தின் 2-ம் பாடல் வெளியானது. *பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வரும் 23-ம் தேதி ரிலீசாகிறது. *தனுஷ் நடிப்பில் ‘போர் தொழில்’ இயக்குநர் இயக்கும் ‘D54’ படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என தகவல். *‘மரகத நாணயம் 2’ குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. *அல்லு அர்ஜுன் -லோகேஷ் இணையும் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்.
News January 14, 2026
தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் இன்று(ஜன.14) சற்று குறைந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $11 குறைந்து $4,597-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலை 1 அவுன்ஸ் $3 உயர்ந்து $88 ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவால் இந்திய சந்தையில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.


