News August 7, 2024
சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக, அப்பாவு பேட்டியளித்திருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப். 9இல் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 31, 2025
2026-ன் ஆச்சரிய அதிசயம்.. இத கவனிச்சீங்களா!

நாளை புது வருடம் பிறக்கிறது. 01/01/2026 தேதியில் 1/1/1 Pattern உருவாகிறது. 2026-ஐ கூட்டினால் 2+0+2+6= 10, அதை மீண்டும் கூட்டினால் 1 வரும். இந்த Pattern கடைசியாக, 01/01/2017-ல் உருவானது. 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் இந்த அதிசய 2026 ஆண்டு மகிழ்ச்சியும், நன்மைகளும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என Manifest செய்து, இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.
News December 31, 2025
சாதுக்கள் எதிர்ப்பால் ரத்தான சன்னி லியோன் நிகழ்ச்சி!

சாதுக்களின் கடும் எதிர்ப்பால் மதுராவில் மதுபான விடுதி ஒன்றில் நடைபெற இருந்த நடிகை சன்னி லியோனின் புத்தாண்டு நிகழ்ச்சி ரத்தானது. கிருஷ்ணன் லீலைகள் நிகழ்த்திய இப்புனித நகரத்தில், சன்னி லியோனை அழைத்து ஆபாசம் பரப்புகிறார்கள். அவர்களை இந்த ஜென்ம பூமியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என கலெக்டரிடம் சாதுக்கள் மனு அளித்திருந்தனர். அதனையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
விண்ணில் நெருப்பு பந்துகள்! எப்போது பார்க்கலாம்?

2026 தொடக்கத்திலேயே இயற்கை ஓர் அழகான வானியல் விருந்தை அளிக்கவுள்ளது! அதுதான் ‘குவாட்ரான்டிட்’ எரிகல் மழை. ஜன.3 இரவு மற்றும் 4-ம் தேதி அதிகாலை இந்த நிகழ்வு உச்சத்தை எட்டும். 6 மணி நேரம் மட்டுமே நீடிக்கும் எரிகல் மழையின் போது, சுமார் 120 எரிகற்கள் வரை வானை கிழித்து செல்லும். மொட்டை மாடியில், வடக்கு திசையில் வெறும் கண்களாலேயே இதை பார்க்கலாம். பிரகாசமான இந்த நெருப்பு பந்துகளை பார்க்க மிஸ் பண்ணாதீங்க!


