News March 27, 2024
இதுவரை ரூ.70 கோடி மதிப்புள்ள பணம், நகை பறிமுதல்

தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஆண்கள் 3.06 கோடி, பெண்கள் 3.15 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 8,465 பேரும் வாக்களிக்க தகுதியுடையவர்கள். தமிழ்நாட்டில் 64,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுமார் 7 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். இதுவரை ரூ.70 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
Similar News
News January 21, 2026
இஷான் IN, ஸ்ரேயஸ் OUT: சூர்யகுமார் யாதவ்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20-ல் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடமாட்டார் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். காயத்தால் திலக் வர்மா விலகிய நிலையில், No.3 ஸ்பாட்டில் களமிறங்க போவது யார் என கேட்கப்பட்டது. இதற்கு, WC அணியில் இடம்பெற்றுள்ளதால் NO.3 ஸ்பாட்டில் இஷான் கிஷானுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அவர் அதற்கு தகுதியானவர் எனவும் சூர்யகுமார் குறிப்பிட்டார். இதைப்பற்றி உங்க கருத்து?
News January 21, 2026
டிரம்ப்பை சீண்டிய பிரான்ஸ் அதிபர்

உலக பொருளாதார மன்றத்தில் அதிபர் டிரம்ப்பை, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மறைமுகமாக சாடியுள்ளார். சர்வதேச சட்டங்கள் காலில் போட்டு மிதிக்கப்படுவதாகவும், விதிகளற்ற உலகத்தை நோக்கி நாம் நகர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளின் இறையாண்மையை அச்சுறுத்துவதற்கு விரி விதிப்புகள் பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என்ற அவர், பலசாலிகளின்(US) சட்டத்திற்கு ஐரோப்பா ஒருபோதும் பணியாது எனக் கூறியுள்ளார்.
News January 21, 2026
இந்தியாவுடன் ஒப்பந்தம்.. EU ஆணைய தலைவர் பெருமிதம்

<<18865933>>இந்தியா, ஐரோப்பிய யூனியன் <<>>இடையே FTA ஜன.27-ல் கையெழுத்தாக உள்ளது. இந்நிலையில், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது என்றும், இது 200 கோடி மக்களை கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் எனவும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் கூறியுள்ளார். மேலும், இந்த ஒப்பந்தமானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்குக்கு சமம் என்று குறிப்பிட்டுள்ளார்.


