News April 18, 2025
அபிஷேக் சர்மாவை சோதனை செய்த SKY

MI- SRH இடையேயான போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. MI-ன் SKY, SRH நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மாவின் பாக்கெட்டுகளை சோதனை செய்தார். சமீபத்தில் PBKS-க்கு எதிராக சதம் அடித்த பிறகு அபிஷேக் “THIS IS FOR ORANGE ARMY” என பேப்பரில் எழுதப்பட்ட வாசகத்தை காண்பித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதேபோல், எதுவும் எழுதி கொண்டு வந்திருக்கிறாரா என SKY சோதனை செய்தது, மைதானத்தில் சிரிப்பை ஏற்படுத்தியது.
Similar News
News July 8, 2025
இந்தியாவின் ஒட்டக படை தெரியுமா?

ஏவுகணைகளை வைத்து தாக்கும் இக்காலத்திலும், இந்தியாவின் BSF-ல் ஒட்டக படை உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத ராஜஸ்தானின் தார் பாலைவன எல்லையில் இந்த வீர ஒட்டகங்கள் 24×7 ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. 1965-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரிலும் இவை பங்கேற்றுள்ளன. தற்போது 1,200 ஒட்டகங்கள் BSF-ல் உள்ளன. 1976 முதல் குடியரசு தின அணிவகுப்பில், இந்த வீர ஒட்டகங்கள் வண்ணமய ஆடைகளுடன் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.
News July 8, 2025
Non Interlocking ரயில்வே கேட் என்றால் என்ன?

கடலூரில் நிகழ்ந்த விபத்துக்கு ரயில்வே கேட்டில் Interlock இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக ‘Non Interlocking’ ரயில்வே கேட் என்றால், அதனை மூடுவதற்கு தொலைபேசி மூலமே தகவல் அளிக்கப்படும். இவ்வாறு தகவல் கொடுக்கப்பட்டு கேட் மூடப்பட்டது உறுதியான பின்பே ரயில் செல்வதற்கு சிக்னல் அளிக்கப்படும். ஆனால், விபத்து நடந்த இடத்தில் சிக்னல் அளித்த பின்பு வேனுக்காக மட்டுமே கேட் திறக்கப்பட்டதாக தகவல்.
News July 8, 2025
கடலூர் பள்ளி வேன் விபத்து: CM ஸ்டாலின் இரங்கல்

<<16987125>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதியதில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நிவாஸ், சாருமதி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ₹5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்து ICU-வில் உள்ள 3 மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், அமைச்சர் MRK பன்னீர்செல்வத்தை நேரில் சென்று உதவி, ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.