News April 18, 2025
அபிஷேக் சர்மாவை சோதனை செய்த SKY

MI- SRH இடையேயான போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. MI-ன் SKY, SRH நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மாவின் பாக்கெட்டுகளை சோதனை செய்தார். சமீபத்தில் PBKS-க்கு எதிராக சதம் அடித்த பிறகு அபிஷேக் “THIS IS FOR ORANGE ARMY” என பேப்பரில் எழுதப்பட்ட வாசகத்தை காண்பித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதேபோல், எதுவும் எழுதி கொண்டு வந்திருக்கிறாரா என SKY சோதனை செய்தது, மைதானத்தில் சிரிப்பை ஏற்படுத்தியது.
Similar News
News November 24, 2025
டாப் 10 உயரமான சிலைகள்

உலகம் முழுவதும் உள்ள சிலைகள், ஒவ்வொன்றும் நம்பிக்கை, வரலாறு, கலாசாரம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, வானுயர்ந்து நிற்கும் பிரம்மாண்டமான சிலைகள், கட்டுமான சாதனையாக மட்டுமல்லாமல், தேசத்தின் பெருமையாகவும் உள்ளன. இதுபோன்று உலகம் முழுவதும் உள்ள டாப் 10 உயரமான சிலைகள் எங்கெல்லாம் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 24, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. அரசு முக்கிய அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்துள்ளவர்களின் வங்கி கணக்கில் ₹1 அனுப்பி பரிசோதிக்கும் நடைமுறையை அரசு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கி கணக்கில் ₹1 வரவு வைக்கப்பட்ட மெசேஜ் உங்களுக்கு வந்தால், நீங்கள் திட்டத்தில் புதிதாக இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த முறையும் அரசு இதேபோல் தான் செய்தது. யாருக்கெல்லாம் மெசேஜ் வந்திருக்கிறது?
News November 24, 2025
6.16 கோடி பேருக்கு SIR படிவங்கள்: அர்ச்சனா பட்நாயக்

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு SIR படிவங்களை அதிகம் வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுவரை 6.16 கோடி பேருக்கு நேரடியாக SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் SIR படிவங்களில் பெயர் இருக்கும். மேலும், வரும் டிச.4-க்கு பிறகு SIR பணிகள் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


