News October 24, 2024
“சார், மேட்ச் பாக்ஸ் இருக்கா?” கேட்டு சிக்கிக் கொண்ட பாய்ஸ்

கேரளாவில், அடிமாலிக்கு +1, +2 மாணவர் குழு எஜுகேஷன் டூர் சென்றுள்ளனர். அவர்களில் சிலர், தம் அடிக்க தீப்பெட்டி கேட்டு, ஒர்க்ஷாப் போல தெரிந்த பில்டிங்கில் நுழைந்துள்ளனர். அது கலால்துறை அலுவலகம் என்பதை உணர்ந்து எஸ்கேப் ஆவதற்குள், அதிகாரிகள் அவர்களை பிடித்துவிட்டனர். சோதனையிட்டதில் அவர்கள் கஞ்சா பீடிகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் மீது நார்க்கோடிக்ஸ் பிரிவில் வழக்கு போடப்பட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
’மகள்களின் சிகிச்சைக்காக அரசு பங்களாவில் உள்ளேன்’

SC முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தான் பதவி வகித்தப் போது வசித்த அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளார் என புகார் எழுந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த அவர், தனது மகள்களுக்கு நெமலின் மயோபதி எனும் தசை நோய் உள்ளதாகவும், அதற்காக எய்ம்ஸில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தான் ஏற்கனவே SC நீதிபதிகள், அலுவலர்களிடம் விளக்கமளித்திருப்பதாகவும் கூறினார்.
News July 7, 2025
‘மேகதாது திட்டத்துக்கு 5 நிமிடத்தில் அனுமதி பெறுவேன்’

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தற்போது ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. அதைப்போன்று கர்நாடகா பாஜக எம்.பிக்கள், மத்திய அமைச்சர் குமாரசாமி மேகதாது தொடர்பாக எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என காங்., குற்றம் சுமத்தியது. இதற்கு பதிலளித்த குமாரசாமி, தமிழக கூட்டணி கட்சிகளிடம் காங்., சம்மதம் பெற்றால், மேகதாது திட்டத்திற்கு பிரதமரிடம் பேசி 5 நிமிடத்தில் அனுமதி பெற்று தருவேன் என தெரிவித்தார்.
News July 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 389 ▶குறள்: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. ▶பொருள்: துணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.