News October 17, 2025
இந்தியாவின் பெரிய நடிகராக சிம்பு வருவார்: மிஷ்கின்

அரசன் படத்தின் புரோமோ நேற்று வெளியானது. இதில், சிம்புவின் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் சும்மா அசந்து போயிருக்காங்க என்றே சொல்லவேண்டும். இந்நிலையில், புரோமோவை பார்த்த மிஷ்கின், இந்த படத்திற்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரிய நடிகராக சிம்பு வருவார் என மனதார பாராட்டியுள்ளார். மேலும், சிம்பு + வெற்றி காம்போ சிறப்பாக இருக்கும். கதையும் சுவாரஸ்யமாக இருக்கும் என கூறியுள்ளார்.
Similar News
News October 17, 2025
சற்றுமுன்: MLA சிவாஜிராவ் கார்டிலே காலமானார்

மகாராஷ்டிராவின் ரஹுரி தொகுதி MLA-வும், முன்னாள் அமைச்சருமான சிவாஜிராவ் கார்டிலே(67) மாரடைப்பால் காலமானார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், 2009, 2014 மற்றும் 2024 தேர்தல்களில் ரஹுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியவர். சிவாஜிராவ் கார்டிலே மறைவுக்கு மகாராஷ்டிரா CM பட்னாவிஸ், DCM அஜித் பவார், NCP MP சுப்ரியா சுலே உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP
News October 17, 2025
கருணைக்கொலையை அனுமதிக்கும் சட்டம் வந்தது

உருகுவேயில் தீராத மனநலம், உடல்நலம் பிரச்னைகள் உள்ளவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டாக்டர்கள் செய்யும் கருணைக்கொலை அனுமதிக்கப்படும். ஆனால், நோயாளியே மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள கூடாது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கொலையை தேர்ந்தெடுக்க விரும்பினால், டாக்டர்களின் அனுமதியை அதற்கு பெற வேண்டும். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?
News October 17, 2025
விஜய் ஆண்டனி பெண்களுக்கு வைத்த வேண்டுகோள்

பெண்கள் 21 வயதிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என விஜய் ஆண்டனி கூறியுள்ளார். நீங்கள் திருமணம் செய்துகொள்ளும் நபர் நல்லவனாக இருந்தால் சரி. அப்படி இல்லையென்றால் அதை புரிந்துகொள்ளவே 10 வருடம் ஓடிடும். எனவே, காலேஜ் முடிச்சிட்டு கொஞ்ச வருடம் வேலை பாருங்க. 26, 27 வயசுல கல்யாணம் பண்ணுங்க என அவர் அட்வைஸ் கொடுத்துள்ளார். இதை பற்றி உங்கள் கருத்து?