News October 1, 2025
மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் நாளை(அக்.2) டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் கடைகளும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு வருகின்றன. மேலும், விதிகளை மீறி மது விற்பனை செய்தாலோ, கள்ளச் சந்தையில் பதுக்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News October 1, 2025
முடிவை மாற்றும் விஜய்

<<17888163>>ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி பயணம்<<>> பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கரூர் சம்பவம் குறித்து ராகுலிடம் பேசிய விஜய், பாஜக தரப்பினர் பேச முயற்சித்தும் பிடி கொடுக்கவில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கவே ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், தனது முடிவை மாற்றி விஜய் தற்போது பாஜகவுடன் இணக்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
News October 1, 2025
குழந்தையின் பற்கள் சொத்தை ஆகாமல் இருக்க டிப்ஸ்

உங்கள் குழந்தையின் பற்கள் சொத்தையாக இருக்கிறதா? சில எளிய முறைகள் மூலம் அவர்களது பற்கள் கெட்டுபோகாமல் பாதுகாக்கலாம். ➤சாப்பிட்ட பிறகு வாயைக் கொப்பளிப்பது நல்லது ➤காலை, இரவு என 2 வேலை பல் துலக்க சொல்லுங்கள் ➤மிருதுவான பிரஷ்ஷை பயன்படுத்த வேண்டியது அவசியம் ➤சாக்லேட்டுகளை கடித்து சாப்பிட வேண்டாம் என சொல்லுங்கள் ➤நார்சத்து நிறைந்த பழங்களை கொடுப்பது நல்லது. SHARE.
News October 1, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு

கரூர் துயர சம்பவம் வேதனை அளிப்பதாக நேற்று வீடியோ வெளியிட்ட விஜய், 2 வாரத்திற்கு தனது தேர்தல் பரப்புரையை ஒத்திவைப்பதாக இன்று அறிவித்தார். இந்நிலையில், கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளாராம். அவருக்கு பாதுகாப்பு கோரி தவெக தரப்பில் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்தவுடன் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் கூற உள்ளார்.