News October 1, 2025
மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் நாளை(அக்.2) டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் கடைகளும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு வருகின்றன. மேலும், விதிகளை மீறி மது விற்பனை செய்தாலோ, கள்ளச் சந்தையில் பதுக்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News December 16, 2025
21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: IMD

தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இந்த மழை வரும் 21-ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும், இன்று வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கும் எனவும் IMD கூறியுள்ளது.
News December 16, 2025
அதிமுகவில் இபிஎஸ்-க்கு இன்ப அதிர்ச்சி

அதிமுகவில், 349 மனுக்கள் EPS தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என வழங்கப்பட்டுள்ளது அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். முதல் நாளில் மட்டும் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. அதிமுகவில் உள்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், EPS-க்கான இந்த வரவேற்பு அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News December 16, 2025
மார்கழியில் மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க

★செய்ய வேண்டியவை: அதிகாலை நேரத்தில் அதீத ஆக்சிஜன் இருக்கும். எனவே, அதிகாலை எழுவதை வழக்கமாக்கிக்கோங்க ★ஆண்டாளின் திருப்பாவையும், திருவெம்பாவையும் படிக்க வேண்டும் ★இறைவனின் நாமங்களையும், புராணங்களையும் மனப்பூர்வமாக பாராயணம் செய்ய வேண்டும் ★செய்யக்கூடாதவை: மார்கழியில் சுபகாரியங்கள், திருமணம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் ★புதிய தொழில்களை தொடங்கக்கூடாது. SHARE IT.


