News October 11, 2025
ஆட்சியில் பங்கு, அதிக சீட்டு: காங்., எம்.பி. உறுதி

தமிழகத்தில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது அனைத்து காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாகும் என்று கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். திமுக – காங்., இடையே தொடர்ந்து சில சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், வரும் தேர்தலில் அதிக சீட்டுகளை கேட்டு வாங்குவதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்று விஜய் வசந்த் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 11, 2025
இது இந்தியாவில் மட்டும் தான்.. வேறு எங்கும் கிடையாது

இந்தியா, உலகில் வேறு எங்கும் இல்லாத ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தமான நாடு. இந்தியாவில் உள்ள அற்புதமான “உலகின் மிகப்பெரிய / உயர்ந்த / பழமையான / தனித்துவமான” இடங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா? இடங்கள் மற்றும் அதன் சிறப்புகளை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 11, 2025
தீபாவளி பரிசாக ₹2,000.. அரசு ஏற்பாடு

PM கிசான் 21-வது தவணை தொகை, இமாச்சல், பஞ்சாப், உத்தராகண்ட் மாநில விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது. தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில விவசாயிகளுக்கு அக்.18-ம் தேதி வாக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில், விவசாயிகள் தீபாவளி கொண்டாட உதவும் வகையில் ₹2,000 தவணைத் தொகையை இன்னும் முன்கூட்டி (அடுத்த வாரம்) வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 11, 2025
இதயத்தை காக்க இதை செய்யுங்கள்

அலுவலகமோ, அபார்ட்மெண்ட்டோ மாடிப்படியை தவிர்த்து, லிப்ட் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்கு தான். தினசரி மாடிப் படிக்கட்டுகளில் ஏறுவது மாரடைப்பு ஆபத்தை 20% வரை குறைக்கிறதாம். துலேன் பல்கலை., 4,50,000 பேரிடம் நடத்திய ஆய்வின்படி, தினமும் குறைந்தது 50 படிக்கட்டுகள் ஏறுவதன் மூலம் இதய, சுவாச ஃபிட்னஸ் & லிப்பிட் செயல்பாடுகளை மேம்படுத்தலாம். இதனால் மாரடைப்பு ஆபத்து குறையும். SHARE IT!