News April 16, 2025
சட்டப்பேரவையில் கடும் அமளி.. அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து இபிஎஸ் தலைமையிலான அதிமுக MLA-க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கே,என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகிய 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், சபாநாயகர் அப்பாவு அதனை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Similar News
News October 23, 2025
அதிகாரிகளை வறுத்தெடுத்த செல்வப்பெருந்தகை

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஐந்து கண் மதகில் 3 ஷட்டர்கள் வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகளுடன் நேற்று அங்கு, ஸ்ரீபெரும்புதுார் MLA செல்வப்பெருந்தகை ஆய்வில் ஈடுபட்டார். அப்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் தண்ணீரை திறந்து விட்டது ஏன் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். நீங்களே மக்கள் பிரதிநிதியாகி விட்டால் எதற்கு அரசு எனவும் கடிந்துகொண்டார்.
News October 23, 2025
5 நிமிடம் இத பண்ணுங்க.. உடல் புத்துணர்ச்சி பெறும்

வருண முத்ரா உடலில் நீர் உள்ளடக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், நீரிழப்பை தடுக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வலது கையின் சிறு விரலை, உள்நோக்கி மடித்து, கட்டை விரலை அத்துடன் சேர்த்து பிடித்து, மற்ற 3 விரல்களை நீட்டிப் பிடிக்கவும். கைகளை மார்புக்கு முன் வைத்து, விரல்களை அழுத்திப் பிடிக்கவும். இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்து விடவும். இப்படி ஒரு 5 நிமிடம் செய்யுங்கள்.
News October 23, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. கலெக்டர் அறிவித்தார்

சென்னையில் இன்று(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். சில இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அம்மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவித்திருந்தார். முன்னதாக தருமபுரியில் இன்று பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறையாகும்.