News September 10, 2024
அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள்.. டிஜிபி விளக்கம்

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 படுகொலைகள் நடந்ததால், சட்டம் – ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக கேள்வி எழுப்பினர். இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால், நேற்று நடந்த 6 படுகொலைகளும் சொத்து தகராறு, முன் விரோதத்தில் நடந்தவை. சாதி, மத மோதலோ, கலவரத்தாலோ நடைபெறவில்லை. கொலைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று விளக்கமளித்துள்ளார்.
Similar News
News August 19, 2025
ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் புறக்கணிப்பா ? ரசிகர்கள் ஷாக்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல்லில் ஷ்ரேயஸ் 604 ரன்கள், ராகுல் 539 ரன்கள் குவித்த பிறகும் அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலும் இருவரும் இடம்பெறவில்லை. ரிசர்வ் வீரர்களாக பிரசித் கிருஷ்ணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
News August 19, 2025
பாஜக பாணியிலேயே பதிலடி கொடுத்த காங்கிரஸ்

நாட்டின் து.ஜனாதிபதி தேர்தலில் பிராந்திய அரசியலை கையில் எடுத்துள்ளன அரசியல் கட்சிகள். து.ஜனாதிபதி வேட்பாளராக தமிழரான CPR-ஐ தேர்ந்தெடுத்து திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது பாஜக. இதனையடுத்து பாஜக பாணியில் தெலங்கானாவை சேர்ந்த சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்து ஆந்திரா, தெலங்கானாவில் பாஜக கூட்டணிக்கு காங்கிரஸ் செக் வைத்துள்ளது.
News August 19, 2025
பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை குறையப் போகிறது..!

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டியை குறைக்கப் போவதாக PM மோடி அறிவித்திருக்கிறார். அதன்படி, 28%, 18% ஜிஎஸ்டி வரம்புகளில் இருக்கும் பெரும்பாலான பொருட்களின் வரி குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விலை கணிசமாக குறைய உள்ளது. குறிப்பாக, ₹40,000 மதிப்புள்ள மின்னணு பொருட்களின் விலை ₹4,000 வரை குறைய வாய்ப்புள்ளது. SHARE IT