News August 19, 2025
ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் புறக்கணிப்பா ? ரசிகர்கள் ஷாக்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல்லில் ஷ்ரேயஸ் 604 ரன்கள், ராகுல் 539 ரன்கள் குவித்த பிறகும் அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலும் இருவரும் இடம்பெறவில்லை. ரிசர்வ் வீரர்களாக பிரசித் கிருஷ்ணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News December 11, 2025
எனது காதல் இதன் மீது மட்டுமே: ஸ்மிருதி மந்தனா

திருமணம் நிறுத்தப்பட்டதை அடுத்து ஸ்மிருதி மந்தனா முதல்முறையாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் அதிகமாக காதலிக்கவில்லை எனவும், இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்ததும் உள்ளுக்குள் பிறக்கும் உத்வேகம் தான் தன்னை ஊக்கப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரச்னைகளில் இருந்து வெளியேற இந்த உத்வேகம் தான் தன்னை வழிநடத்துவதாகவும் கூறியுள்ளார்.
News December 11, 2025
அமித்ஷா பதிலில் பதட்டம் தெரிந்தது: ராகுல்

மக்களவையில் வாக்கு திருட்டு குறித்த அமித்ஷாவின் பதிலில் பதட்டம் தெரிந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவினருக்கு பல மாநிலங்களில் வாக்குரிமை இருப்பது பற்றியோ, தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து CJI நீக்கியது குறித்தோ அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. CCTV வழங்கப்படாததற்கு அவர் கூறிய காரணம் அபத்தமாக இருந்ததாகவும் ராகுல் விமர்சித்துள்ளார்.
News December 11, 2025
SM ஹிஸ்டரியை காட்டினால் தான் US-க்குள் நுழைய முடியும்

UK, ஜப்பான், சிங்கப்பூர், கத்தார் உள்ளிட்ட 40 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல், அமெரிக்காவில் 90 நாள்கள் வரை தங்கலாம். ஆனால், தற்போது இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது 5 ஆண்டுகால சமூக வலைதள ஹிஸ்டரியை சமர்பிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்த புதிய நடைமுறையை கட்டாயமாக்கவும் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இதனால், பயணிகளின் தனி உரிமை கேள்விக்குறியாகி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.


