News December 4, 2024

சீரியல் நடிகர் நேத்ரன் மறைவு!

image

சீரியல்களில் நடித்து வந்த பிரபல நடிகர் நேத்ரன் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கனா காணும் காலங்கள் சீசன் 2, ரஞ்சிதமே, பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களில் அவர் நடித்து வந்தார். இவரது மறைவால் சின்னத்திரை உலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Similar News

News July 9, 2025

தமிழ்நாடு குறித்து அறியப்படாத ‘6’ முக்கிய தகவல்கள்

image

எண்ணற்ற சிறப்புகளை கொண்ட ‘தமிழ்நாடு’ மாநிலத்தின் பெரிதும் அறிந்திடாத சில தகவல்களை மேலே உள்ள போட்டோக்களில் பாருங்க. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு சிறப்பு நமது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. மேலே கொடுக்கப்பட்டுள்ளவை கொஞ்சம் தான். இதுபோன்ற நமது மாநிலம் குறித்து உங்களுக்கு தெரிஞ்ச சில அரிய தகவல்களை கமெண்ட் செய்யவும். கெத்தாக சொல்லுங்க தமிழன்டா என!

News July 9, 2025

செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் தமிழர் நியமனம்

image

கடலூர், செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதற்கு, வடமாநில கேட் கீப்பரை பணியமர்த்தியதால் அவருக்கு மொழி தெரியாமல் பதிலளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை உள்ளூர் மக்கள் முன்வைத்தனர். இந்நிலையில், ஆனந்தராஜ் என்பவர் புதிய கேட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே விதிகளை முறையாக பின்பற்றுமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

News July 9, 2025

1.10 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு காத்திருப்பு!

image

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை சேர்க்கும் பணி துவங்கி புதிய ரேஷன் கார்டை அரசு விரைவாக வழங்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியிலிருந்து மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், பல முறை ஆய்வு செய்த பிறகே வழங்கப்படுவதால், ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார் 1.10 லட்சம் பேர் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. மக்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா?

error: Content is protected !!