News December 4, 2024

சீரியல் நடிகர் நேத்ரன் மறைவு!

image

சீரியல்களில் நடித்து வந்த பிரபல நடிகர் நேத்ரன் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கனா காணும் காலங்கள் சீசன் 2, ரஞ்சிதமே, பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களில் அவர் நடித்து வந்தார். இவரது மறைவால் சின்னத்திரை உலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Similar News

News April 28, 2025

ரோட்டரி நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்

image

மன்னார்குடி ரோட்டரி சங்கம் மற்றும் கோவை தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் (04/05/2025) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை வடசேரி சாலையில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ரோட்டரி சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் கண்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கு சிகிச்சை குறித்து இந்த முகாம் நடைபெறவிருக்கிறது.

News April 28, 2025

பால்வளத்துறையை கையில் எடுத்த மனோ தங்கராஜ்

image

மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவருக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது திடீரென்று அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட்டார். சுமார் 7 மாதம் கழித்து அமைச்சரான அவருக்கு மீண்டும் அதே துறையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். தேர்தல் வர இன்னும் ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

News April 28, 2025

ஒரு நாள் அரசு பொது விடுமுறை..

image

வரும் வியாழக்கிழமை (மே 1) உழைப்பாளர் தினத்தையொட்டி, பொதுவிடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், மே 1-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல், தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட வேண்டும்.

error: Content is protected !!