News August 6, 2024
செந்தில்பாலாஜி ஜாமின் மனு: இன்று விசாரணை

ஜாமின் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான அவரின் ஜாமின் மனு மீதான நேற்றைய விசாரணையில், அமலாக்கத்துறை தரப்பில் வாய்தா கேட்க, நீதிபதிகள் அதற்கு அதிருப்தி தெரிவித்தனர். தனக்கு ஜாமின் கிடைக்கக்கூடாது என்பதற்காகவே, விசாரணையை தள்ளிப்போட ED முயல்வதாக செந்தில்பாலாஜி தரப்பு குற்றஞ்சாட்ட, விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News March 22, 2026
திமுகவில் இருந்து விலகி அதிமுகவுடன் கூட்டணியா?

திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் உள்ள வேல்முருகன், கூட்டணியா? தனித்து போட்டியா? என்ற முடிவை இன்று 11 மணிக்கு அறிவிக்கிறார். 2 நாள்களாக அதிமுக தரப்பு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தங்களுடன் இணைந்தால் பண்ருட்டி, நெய்வேலி, ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளை தவாகவுக்கு ஒதுக்க EPS ஆஃபர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வேல்முருகன் என்ன முடிவை எடுக்கப்போகிறார்?
News March 22, 2026
New Voter ID Holders இந்த தேர்தலில் வாக்களிக்க முடியுமா?

இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் மட்டுமே 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இப்பட்டியலில் பெயர் விடுப்பட்டிருப்பின், மார்ச் 26-க்குள் விண்ணப்பித்து பெயரை இணைக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்பு புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க இயலாது.
News March 22, 2026
Revenge: திமுகவை கண்டுகொள்ளாத காங்கிரஸ்

தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாமல் எப்படி காங்கிரஸை திமுக இழுத்தடித்ததோ, அதே பாணியில் தற்போது புதுச்சேரியில் திமுகவை காங்கிரஸ் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. நேற்று முதல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஜெகத்ரட்சகன் காத்திருந்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் கண்டுகொள்ளவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த திமுகவினர், காங்கிரசாரின் செயல்பாடு குறித்து தலைமையிடம் முறையிட சென்னை கிளம்பியுள்ளனராம்.


