News April 20, 2025
CPI கட்சி மூத்த தலைவர் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI ) திபாகர் நாயக் (72) காலமானார். அக்கட்சியின் ஓடிசா மாநில செயலாளராக பல ஆண்டுகள் அவர் பதவி வகித்துள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு குழுப்பினராகவும் இருந்துள்ளார். CPI கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘நுவா துனி’யாவின் ஆசிரியராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு மரணமடைந்தார்.
Similar News
News November 5, 2025
இந்தியா ஒரு சூப்பர்பவர் நாடு: இஸ்ரேல் அமைச்சர்

இந்தியா ஒரு சூப்பர்பவர் நாடு என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியான் சார் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, கண்டுபிடிப்பு, தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம் என முன்னெப்போதும் இல்லாததை விட இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்புறவு வலுப்பெற்று வருவதாகவும், அவர் கூறியுள்ளார். மேலும், ஹமாஸின் கொடூர தாக்குதலின் போது PM மோடி முதல் ஆளாக போன் செய்து ஆறுதல் கூறியதை என்றும் மறக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
குழந்தைகளுடன் பேசுங்கள்

பெற்றோர் – குழந்தைகள் இடையிலான உறவு சரியாக இல்லாததே, குழந்தைகளின் ஆளுமைத்திறன் குறைபாடு முதல் தற்கொலை எண்ணம் வரை காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதும், தேவைகளை நிறைவேற்றுவதும், கல்வி அளிப்பதும் மட்டும் பெற்றோரின் கடமை அல்ல. அவர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப அவர்களுடன் நல்ல புரிதலை ஏற்படுத்தி, வழிகாட்ட வேண்டும். வேறு என்னவெல்லாம் செய்யலாம்?
News November 5, 2025
‘7ஜி ரெயின்போ காலனி 2′ அப்டேட்

‘7ஜி ரெயின்போ காலனி’ 2-ம் பாகத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தில் இறந்த அனிதா கேரக்டர், இந்த பாகத்தில் இருக்கிறதா இல்லையா என்பது சஸ்பென்ஸ் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் கால்ஷீட் கொடுத்தால் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ மற்றும்
‘புதுப்பேட்டை 2’ படங்களை எடுக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.


