News August 6, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஆகஸ்ட் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News April 2, 2026

நாகர்கோவில் அருகே மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை

image

நாகர்கோவில் அருகே குத்தேரி பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில தினங்கள் முன்பு வீட்டில் இவர் இருக்கும் போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் நேற்று 3% வரை உயர்ந்த தங்கம் இன்று சரிவைக் கண்டு வருகிறது. தற்போது 1 அவுன்ஸ் (28g) தங்கம் $25 குறைந்து $4,687-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி 1 அவுன்ஸ் $2 குறைந்து $72-க்கு விற்பனையாகிறது. காலை 9 மணி வரை இதே நிலை நீடித்தால், நம்மூர் சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. நேற்று சவரனுக்கு ₹3,040 உயர்ந்தது கவனிக்கத்தக்கது.

News April 2, 2026

தமிழகத்தில் குறைவான குற்றங்கள்: கனிமொழி

image

தமிழகத்தில் அதிக குற்றச் சம்பவங்கள் நடப்பதாக <<19351175>>பியூஷ் கோயல்<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் நிகழும் குற்றங்களின் எண்ணிக்கையை விட தமிழகத்தில் குறைவு தான் என்று கனிமொழி பதிலளித்துள்ளார். தமிழகத்தில் குற்றம் நடந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத் தரக்கூடிய ஆட்சி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!