News August 6, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (ஆகஸ்ட் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News January 24, 2026
திண்டிவனம் மாவட்டத்தை உருவாக்குக: ரவிக்குமார்

விருத்தாசலம், செய்யாறு, பொள்ளாச்சி, ஆத்தூர், கும்பகோணம் ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு புதிதாக<<18938284>> 5 மாவட்டங்கள்<<>> அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், திண்டிவனம், செஞ்சி, மயிலம் சட்டமன்றத் தொகுதிகளை இணைத்து திண்டிவனத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று CM ஸ்டாலினுக்கு விசிக MP ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
News January 24, 2026
கூட்டணியில் இணைந்தவுடன் டிடிவி அதிர்ச்சி அறிவிப்பு

NDA கூட்டணியில் இணைந்த இரண்டே நாளில் அமமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை TTV தினகரன் வெளியிட்டுள்ளார். முழு மனதுடனேயே NDA கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இதனால், அமமுக முக்கிய தலைவர்கள் மட்டும் 2026 தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும், TTV ராஜ்யசபா எம்பியாக தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News January 24, 2026
அதானி வசமான IANS செய்தி நிறுவனம்

அதானி குழுமத்தின் ஆதிக்கம் நியூஸ் மீடியாவிலும் அதிகரித்துள்ளது. 2023-ல் பிரபல செய்தி நிறுவனமான IANS-ன் 50.50% பங்குகளை வாங்கிய அதானியின் மீடியா நிறுவனமான AMG மீடியா, 2024-ல் 76% பங்குகளை கைப்பற்றியது. தற்போது IANS நிறுவனத்தின் 100% பங்குகளுமே AMG மீடியா வசம் சென்றுவிட்டது. ஏற்கெனவே NDTV, Quint போன்ற செய்தி நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளும் அதானி குரூப்பிடமே உள்ளது குறிப்பிடத்தக்கது.


