News September 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Similar News
News September 30, 2025
லண்டனில் காந்தி சிலை அவமதிப்பு

லண்டனின் டவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையை அவமதித்ததற்கு அங்குள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது அகிம்சை மற்றும் காந்தியின் மரபு மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் என்றும் எதிர்ப்பை X தளத்தில் பதிவு செய்துள்ளது. இந்த வெட்கக்கேடான செயல், காந்தியின் பிறந்தநாளுக்கு 3 நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட நாசவேலை என்றும் கடுமையாக இந்திய தூதரகம் விமர்சித்துள்ளது.
News September 30, 2025
சே குவேரா பொன்மொழிகள்

*நீ ஊமையாய் இருக்கும்வரை, உலகம் செவிடாய் தான் இருக்கும்.
*விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால், மரம். இல்லையெனில், உரம்.
*அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும்.
*சொல்லின் சிறந்த வடிவம் செயல். செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை.
* நான் சாகடிக்கப்படலாம். ஆனால், தோற்கடிக்கப்படமாட்டேன்.
News September 30, 2025
பா.ரஞ்சித் படத்தில் பொன்னியின் செல்வன் நடிகை

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தில் நடிகை ஷோபிதா துலிபலா இணைந்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு, இப்படத்தில் சிறப்பான ரோல் உள்ளதாக ரஞ்சித் கூறியுள்ளார். இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இதன் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.