News September 30, 2025
லண்டனில் காந்தி சிலை அவமதிப்பு

லண்டனின் டவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையை அவமதித்ததற்கு அங்குள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது அகிம்சை மற்றும் காந்தியின் மரபு மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் என்றும் எதிர்ப்பை X தளத்தில் பதிவு செய்துள்ளது. இந்த வெட்கக்கேடான செயல், காந்தியின் பிறந்தநாளுக்கு 3 நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட நாசவேலை என்றும் கடுமையாக இந்திய தூதரகம் விமர்சித்துள்ளது.
Similar News
News November 9, 2025
டாப்-7 சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்!

இந்திய திரையுலகில் விளையாட்டை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் டாப்-7 சிறந்த படங்களின் பட்டியலை கொடுத்துள்ளோம். இவற்றில் சில படங்களை நீங்கள் ஏற்கெனவே பார்த்திருக்கலாம். படங்களின் விவரத்தை SWIPE செய்து தெரிந்து கொள்வதுடன், பார்க்காதவற்றை தவறாமல் OTT-ல் பார்க்கவும்.
News November 9, 2025
நவம்பர் 9: வரலாற்றில் இன்று

*1896-நாதசுவரக் கலைஞர் பி.எஸ்.வீருசாமி பிள்ளை பிறந்தநாள். *1959-வீணைக் கலைஞர் ஈ.காயத்ரி பிறந்தநாள். *1965-நடிகர் வேணு அரவிந்த் பிறந்தநாள். *1988-தேங்காய் சீனிவாசன் மறைந்த நாள். *1998-பி.எஸ்.வீரப்பா மறைந்த நாள். *2006-எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மறைந்த நாள். *2024-நடிகர் டெல்லி கணேஷ் மறைந்த நாள்.
News November 9, 2025
பூதத்தின் பிடியில் தமிழ் சினிமா: கஸ்தூரி

தமிழ் திரையுலகம் ஒரு பூதத்தின் பிடியில் இருப்பதாக கஸ்தூரி விமர்சித்துள்ளார். பாஜக மாநில கலை & கலாசார பொதுக்குழுவில் பேசிய அவர், தமிழ் திரையுலகம் ஒரு சாராரிடம் சிக்கியுள்ளதாக கூறியுள்ளார். அது மொத்த ஊரிடம் இருந்தால் மட்டுமே அதன் வளர்ச்சி நன்றாக பரிணமிக்கும் என்றும், திரைத்துறையை விடுவிப்பதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் கஸ்தூரி பேசியுள்ளார்.


