News September 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Similar News
News September 30, 2025
கரூர் துயரத்தில் 4 பக்கமும் தவறு: ப.சிதம்பரம்

கரூர் துயர சம்பவத்தில் 4 பக்கமும் தவறு இருப்பதாக தோன்றுகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு தோன்றிய ஒரு யோசனையை தலைமை செயலாளரிடம் கூறியதாகவும், இதுபோன்று பலர் தெரிவித்த யோசனைகளை பரிசீலித்து எடுக்கப்படும் முடிவுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 474 ▶குறள்: அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். ▶பொருள்: பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.
News September 30, 2025
கரூருக்கு வர PM விரும்பினார்: நிர்மலா சீதாராமன்

பிரதமர் கரூருக்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விரும்பியதாக கூறிய நிர்மலா சீதாராமன், அவர் வர முடியாத காரணத்தால் தான் வந்ததாக தெரிவித்துள்ளார். விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சையில் இருந்தோரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்றார்.