News April 24, 2025
SAY NO TO PSL… அதிரடி நடவடிக்கை

IPL போல பாகிஸ்தானில் PSL நடைபெற்று வருகிறது. நடப்பு சீசன் PSL கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்தியாவில் ஃபேன்கோட் இணையதளத்தின் வழியாக PSL-ஐ இந்தியாவில் பார்க்கும் வசதி உள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவில் PSL ஒளிபரப்பப்படாது. செய்யப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 24, 2025
காஷ்மீர் இளைஞர் மரணம்.. தந்தை பெருமை!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணிகளை காக்க முயன்ற உள்ளூர்வாசி <<16192997>>சையது<<>> சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், தனது மகன் உயிரை தியாகம் செய்ததால்தான் தான் தற்போது உயிரோடு இருப்பதாக அவரது தந்தை ஹைதர் ஷா பெருமையுடன் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் மகனின் சடலத்தை பார்த்ததும் தானும் இறந்து போயிருப்பேன் எனவும், ஒரு சிலரை காப்பாற்றிய தனது மகனின் வீரம் குறித்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News April 24, 2025
நாளை வானம் ‘SMILE’ பண்ணும்!

மகிழ்ச்சியின் அடையாளமான சிரித்த முகத்துடன் நாளை வானம் தோன்றும். நாளை அதிகாலை 5.30 மணிக்கு வியாழனும், சனியும் நிலவுக்கு அருகில் வருவதால் இந்த நிகழ்வு நடக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இரு கோள்களும் இரு கண்கள் போல் காட்சி தர பிறை நிலா சிரித்தவாறு இருக்கும். 1 மணி நேரம் நீடிக்கும் இந்நிகழ்வை முன் வெறும் கண்களாலே பார்க்கலாம் என்றாலும், டெலஸ்கோப், பைனாகுலர்களில் பார்த்தால் இன்னும் தெளிவாக தெரியும்.
News April 24, 2025
இந்த நாயகியை பாராட்டலாமே!

தீவிரவாத தாக்குதலுக்கு ஒரு சில பிரபலங்கள் கண்டனம் தெரிவிக்கவே யோசிக்கும் நிலையில், தெலுங்கு நடிகை அனன்யாவின் செயல்பாடு பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த மதுசூதனன் உடலுக்கு நடிகை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.