News October 12, 2024
சண்முக பாண்டியனுக்கு “கொம்பு சீவி” விடும் சரத்

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு “கொம்புசீவி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1996 -97 காலகட்டத்தில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த உண்மைக் கதைகளின் அடிப்படையில் இப்படம் உருவாகி வருகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சரத்குமார் நாற்காலியில் அமர்ந்திருக்க, சண்முக பாண்டியன் கையில் நாட்டு துப்பாக்கியுடன் நின்றிருக்கிறார்.
Similar News
News April 11, 2026
நண்பருக்கு ஆதரவாக நிற்கும் சூர்யா

ரிலீஸுக்கு முன்பே ஜன நாயகன் படம் லீக்கானது நெஞ்சை உலுக்கும் அநீதி என சூர்யா கூறியுள்ளார். இதுதொடர்பான X பதிவில், ஒரு குழுவின் உழைப்பும், ஆர்வமும் சிதைக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தார். தயவுசெய்து இப்படத்தை இணையத்தில் பகிரவோ, விவாதிக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொண்ட சூர்யா, இது மன்னிக்க முடியாதது என கடிந்துகொண்டார். மேலும், தனது நண்பர்களுக்கு ஆதரவாக நிற்பதாகவும் கூறியுள்ளார்.
News April 11, 2026
தவெகவுக்கு ஆதரவாக களமிறங்கும் நடிகர் ராமராஜன்!

நடிகரும், அதிமுக EX MP-யுமான ராமராஜன் தவெகவுக்கு பிரசாரம் செய்ய உள்ளதாக அறிக்கை வெளியிட்டு அதிமுகவுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக உள்ள அவரை EPS கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆலங்குளம் தவெக வேட்பாளர் விபினுக்கும், மதுரை மேலூரில் சுயேச்சையாக போட்டியிடும் நண்பரின் மகன் முருகனுக்கும் பிரசாரம் செய்ய உள்ளதாக ராமராஜன் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 11, 2026
அன்று தாராபுரத்தில் எம்ஜிஆர்… இன்று எடப்பாடியில் விஜய்!

1977 தேர்தலில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. ஆம்! தாராபுரம் அதிமுக வேட்பாளர் அய்யாசாமிக்கும், எம்ஜிஆருக்கும் கடைசி நேரத்தில் முரண்பாடு ஏற்பட்டது. இதனால், சுயேச்சையை ஆதரித்த MGR, இரட்டை இலைக்கு எதிராகவும், சிங்கம் சின்னத்திற்கு ஆதரவாகவும் பரப்புரை செய்தார். ஆனால், மக்களோ! இரட்டை இலையை வெற்றிபெற செய்தனர். அதேபோல், தற்போது <<19620700>>எடப்பாடியில் <<>>சுயேச்சையை ஆதரிக்கவிருக்கும் விஜய்க்கு என்ன நடக்கும்?


