News April 24, 2025
11 பேரின் உயிர்களை காத்த உப்பு சாப்பாடு

கொச்சியை சேர்ந்த ஆல்பி ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேர் ஸ்ரீநகர் சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை பஹல்காம் செல்கையில், சாலையோர கடையில் பிரைட் ரைஸ் சாப்பிட்டனர். அதில் உப்பு அதிகம் இருந்ததால், புதிய உணவு தயாரிக்க 1 மணி நேரம் காத்திருந்தனர். அந்த நேரத்தில்தான் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடையில் நேரம் தாமதப்படாமல் பஹல்காம் சென்றிருந்தால், அவர்களும் உயிரிழந்திருப்பர்.
Similar News
News March 6, 2026
இதுதான் என்னுடைய கனவு.. ஸ்டாலின் சொல்கிறார்

TN முழுவதுமே சமத்துவபுரமாக மாறவேண்டும், எங்கும் சமூகநீதி ஒலிக்க வேண்டும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தன்னுடைய கனவு என CM ஸ்டாலின் கூறியுள்ளார். இவை அனைத்தும் பெற, மாவட்ட வாரியாக தனித்தனி செயல்திட்டம் வகுக்கப்படும் என்ற அவர், இது மு.க.ஸ்டாலின் கொடுக்கும் உறுதிமொழி என்றார். மேலும், TN-ன் இந்த வளர்ச்சி பயணத்தில் யாரையும் பின்தங்க விடமாட்டோம் என்றும் அவர் கூறினார்.
News March 6, 2026
UPSC தேர்வு முடிவுகள் வெளியானது

நாடு முழுவதும் UPSC நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அனுஜ் அக்னிஹோத்ரி என்பவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ராஜேஸ்வரி சுவே இரண்டாம் இடத்தையும், அகன்ஷ் துல் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். UPSC தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை <
News March 6, 2026
BREAKING: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு

10, +12 பொதுத்தேர்வு கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர்கள் தேர்வு மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்களுக்கு வழங்கியது போக, மீதமுள்ள வினாத்தாள்களை உறையினுள் வைத்து சீலிட்டு தவறாமல் துறை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


