News October 7, 2025
விஜயகாந்த் குடும்பத்தில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி (83) சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனால், பிரேமலதாவின் பரப்புரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மூத்த சகோதரி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தில் மீண்டும் ஒரு துக்கமான நிகழ்வு நடந்தது, தேமுதிகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Similar News
News October 7, 2025
தங்கத்தின் விலையை தீர்மானிப்பவர்கள் யார்?

தினம் தங்கம் விலை ஏறும்போது, ‘யாருடா இப்படி விலையை ஏத்தறது?’ என்று யோசிச்சிருக்கீங்களா? London Bullion Market சங்கம் தான் அதற்கு காரணம். அது நிர்ணயிக்கும் விலையில்தான் நாடுகளும் நிறுவனங்களும் தங்கத்தை வாங்கவும் விற்கவும் செய்கின்றன. இந்தியாவில், இறக்குமதி வரிக்கேற்ப உள்நாட்டில் விலையை India bullion & jewellers association தீர்மானிக்கிறது. தேவை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் விலை முடிவாகும்.
News October 7, 2025
தமிழகத்தில் அதிகரித்த டெங்கு காய்ச்சல்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். TN முழுவதும் 10000 டெங்கு ஒழிப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கொசு உற்பத்தியை தடுக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல் 15,796 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 8 பேர் பலியானதாகவும் அவர் கூறியுள்ளார்.
News October 7, 2025
யாரு சாமி நீ.. 1,638 கிரெடிட் கார்டுகளை யூஸ் பண்ணுபவர்!

ஒரு கிரெடிட் கார்டு பில்லையே கட்டமுடியாமல் பலரும் தவித்து வரும் நிலையில், அதிக கிரெடிட் கார்ட் வைத்திருப்பதில் இவர் 2021-ல் கின்னஸ் ரெக்கார்டே படைத்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த மணிஷ் தாமேஜா மொத்தம் 1,638 கிரெடிட் கார்டுகள் உள்ளன. சும்மா வாங்கி வைக்காமல், அனைத்து கார்டுகளும் ஆக்டிவாகவே இருந்துள்ளன. நிதி மேலாண்மைக்கு இவருக்கு கிட்ட தான் ஐடியா கேக்கணும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.