News October 13, 2025
சபரிமலை தங்கம் மாயம்: கூட்டு கொள்ளை அடித்தது அம்பலம்

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில், தேவஸ்தான அதிகாரிகள் கூட்டு கொள்ளையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. தங்க தகடுகளை புதுப்பிக்க இடைத்தரகராக செயல்பட்ட உன்னி கிருஷ்ணன் போற்றி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர் உள்ளிட்ட 10 பேர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சபரிமலை துவார பாலகர் சிலைகளின் கவசங்களில் 986 கிராம் தங்கம் குறைந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
Similar News
News October 13, 2025
திமுக கூட்டணியில் இருந்து இந்த கட்சி விலகலா?

கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டால் 2026-ல் தனித்து போட்டியிட தயார் என வேல்முருகன் அறிவித்துள்ளார். 2021 தேர்தல் வெற்றிக்குப்பின், திமுகவுக்கும், வேல்முருகனுக்கும் இடையே அவ்வப்போது மோதல் வெடிக்கும். இதனால், திமுக கூட்டணியில் இருந்து அவர் வெளியேற வாய்ப்புள்ளதாக அடிக்கடி செய்திகளும் வெளியாகும். இந்நிலையில் ‘தனித்து போட்டி’ என அவர் கூறியது, கூட்டணியில் இருந்து விலகலா என கேள்வி எழுந்துள்ளது.
News October 13, 2025
₹1.35 லட்சம் வரை ஆஃபர் அறிவித்த டாடா

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல், EV உள்ளிட்ட அனைத்து கார்களின் விலையையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது. குறைந்தபட்சம் ₹25,000-ல் தொடங்கி அதிகபட்சமாக ₹1.35 லட்சம் வரை ஆஃபர் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு ரொக்க தள்ளுபடி, பரிமாற்றம், லாயல்டி போனஸும் வழங்கப்படுகிறது. வரும் 21-ம் தேதி வரை மட்டுமே இந்த ஆஃபர் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 13, 2025
BREAKING: விஜயகாந்த் வீட்டில் பரபரப்பு

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதா விஜயகாந்தின் வீடு, தேமுதிக அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக இ-மெயில் வந்ததை அடுத்து நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மோப்ப நாயுடன், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் விஜயகாந்த் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர், அது புரளி என தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம், CM ஸ்டாலின், ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.