News April 8, 2024
அரை சதம் கடந்தார் ருதுராஜ்

கொல்கத்தா அணிக்கு எதிராக பொறுமையாக ஆடிவரும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் அரை சதம் கடந்துள்ளார். இது நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் அடிக்கும் முதலாவது அரை சதமாகும். CSK அணி தற்போது வரை 12 ஓவர்கள் முடிவில் 96/1 ரன்கள் எடுத்துள்ளது. CSK வெற்றிபெற இன்னும் 42 ரன்கள் தேவை உள்ள நிலையில் கைவசம் 8 ஓவர்கள் உள்ளது. மிச்செல் 25* ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று CSK வெற்றிபெறுமா?
Similar News
News November 12, 2025
ஸ்டாலின் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள்: நிர்மலா

மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். SIR-க்கு எதிராக திமுக போராட்டம் நடத்துவது ஆச்சரியம் அளிக்கிறது எனக் கூறிய அவர், SIR என்றால் என்ன என்றே தெரியாமல் உதயநிதி ‘ரிவிஷன்’ என்பதை ‘ரெஸ்ட்ரிக்ஷன்’ என சொல்வதாக விமர்சித்தார். மேலும், தங்களின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க திமுக, இதுபோன்ற நிலைப்பட்டை எடுப்பதாக சாடினார்.
News November 12, 2025
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $23.64 உயர்ந்து $4,137-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. நேற்று (நவ.11) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,760 அதிகரித்து, ₹93,600 -க்கு விற்பனையானது. SHARE.
News November 12, 2025
கூண்டோடு கட்சியில் இணைந்தனர்

கடந்த செப்டம்பரில் ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ (NMMK) என்ற புதிய கட்சியை தொடங்கி மாநிலம் முழுவதும் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில், 1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் NMMK-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன்பின் பி.எல்.ஏ.ஜெகநாத் பேசுகையில், ஒத்த கருத்துடைய கட்சியுடன் இணைந்து 2026 தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார்.


