News November 18, 2024
ரேஷன் அரிசி கடத்தலால் ரூ.69,000 கோடி இழப்பு!

நாடு முழுவதும் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தலால் ரூ.69,108 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக செலவு கணக்கெடுப்பு(HCES) தரவுபடி ஆக. 2022 – ஜூலை 2023 வரை 20 மில்லியன் டன் ரேஷன் கடத்தப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் ரேஷன் பொருட்களில் 28% ஆகும். ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைப்பதால் இதுபோன்ற கடத்தல் சம்பவங்களைத் தடுக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 17, 2026
கூட்டணி விவகாரத்தில் அதிமுகவின் திட்டம் என்ன?

சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தது 160 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளது. அத்துடன் <<19396818>>CM வேட்பாளர்<<>> நான் தான் என EPS பிடிவாதமாக இருப்பதாலேயே தவெகவை உள்ளே இழுக்கும் டெல்லி தலைமையின் முடிவு தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், அண்மையில் வந்த <<19394359>>கருத்துக்கணிப்பு முடிவுகளும்<<>> தங்களுக்கு சாதகமாக இருப்பதால் தற்போதுள்ள கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ள EPS முடிவு செய்துள்ளாராம்.
News March 17, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறார்.. அதிர்ச்சி

<<19394504>>திமுகவின் சமரச பேச்சுவார்த்தை<<>> தோல்வியடைந்ததால், கூட்டணியிலிருந்து விலக தமிழக வாழ்வுரிமைக் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் தொகுதிகளை கேட்டு விசிக, சிபிஐ, சிபிஎம் ஏற்கெனவே அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், வேல்முருகனின் விலகல் முடிவு என்பது திமுக கூட்டணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News March 17, 2026
பாஜகவில் இணைந்த கம்யூனிஸ்ட் MLA

கேரளாவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அம்மாநில அரசியலில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் MLA முகுந்தன் பாஜகவில் இணைந்துள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் தரவில்லை என்றால் சுயேச்சையாக போட்டியிடுவேன் என கூறியதால் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர் பாஜகவில் இணைந்துள்ளார். மேலும், நட்டிகா தொகுதியில் பாஜக வேட்பாளராக அவர் களமிறங்குவார் என கூறப்படுகிறது.


