News August 8, 2024
கோலியைவிட ரோஹித் தான் சிறந்த பேட்ஸ்மேன்: ஜாஹித்

விராட் கோலியை விட ரோஹித் ஷர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முகமது ஜாஹித் புகழாரம் சூட்டியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், “கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்பதை யாரும் மறுக்க முடியாது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக ஆடும் தைரியம் கொண்ட ரோகித் சிறந்தவர். லென்த்தை பிடித்து அடிக்கக் கூடிய ஆற்றலும் அவர் கொண்டுள்ளார்” எனப் பாராட்டியுள்ளார்.
Similar News
News July 9, 2025
ராஜூவுடன் ஜாலியாக ஊர் சுற்றும் சமந்தா!

சில காலமாகவே சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் பழகி வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்க சென்ற சமந்தா, நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட போட்டோக்களில் ராஜை இறுக்கமாக பிடித்தபடி, சமந்தா இருக்கும் போட்டோ தான் நெட்டிசன்களின் கவனத்தை அதிகளவு ஈர்த்துள்ளது. ஒருவேளை வெளிவரும் செய்திகளில் உண்மை இருக்குமோ என நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர்.
News July 9, 2025
காமராஜர் பிறந்தநாளில் விஜய்யின் அடுத்த நகர்வு

1 கோடி உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மறைந்த Ex CM காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, ‘My TVK’ என்ற செயலியையும் அவர் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. வேகமெடுக்கிறதா தவெக?
News July 9, 2025
சர்வதேச சந்தையில் சரியும் தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கம் விலை இன்று (ஜூலை 9) ஒரே நாளில் 42 டாலர்கள்(₹3,606) சரிந்து 3,254 டாலருக்கு விற்பனையாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை சரிவு, இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் மாறாததே <<17001872>>தங்கம் விலை இன்று<<>> குறையக் காரணம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலக சந்தையில் இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் சரியுமாம்.