News April 29, 2025
மூடப்பட்ட ரிசார்ட்டுகள்.. சரிவை சந்திக்கும் காஷ்மீர் சுற்றுலா…

தாக்குதலை தொடந்து ஜம்மு-காஷ்மீரில் ரிசார்ட்டுகள், முக்கிய சுற்றுலாத் <<16251353>>தலங்கள் <<>>மூடப்பட்டதால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். கோடை விடுமுறையையொட்டி காஷ்மீர் செல்லத் தயாராகிய பலர் ரிசார்ட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் சுற்றுலாவை நம்பி இருக்கும் காஷ்மீர் மக்களுக்கு எமனாக அமைந்தது தீவிரவாத தாக்குதல். இதில் இருந்து மீண்டு வருவது எளிதான காரியம் அல்ல.
Similar News
News April 29, 2025
BSF வீரரை மீட்பது எப்போது? காங். கேள்வி

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை(BSF) வீரரை மீட்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என காங். கேள்வி எழுப்பியுள்ளது. ஏப்.23-ல் ஃபெரோஸ்பூர் அருகே எல்லை தாண்டியதாக கூறி, பூர்ணம் சாஹு என்ற BSF வீரர் பாக்., ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பஹல்காம் தாக்குதலால் சாஹுவை மீட்பது குறித்த பேச்சுவார்த்தை தடைபட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
News April 29, 2025
சூர்யா ரசிகர்களுக்கு ரெடியாகும் ட்ரீட்

‘ரெட்ரோ’, = RJ பாலாஜி படம் என அடுத்தடுத்து சூர்யாவுக்கு படங்கள் வர உள்ளன. ஆனால் ரசிகர்கள் காத்திருப்பதோ வாடிவாசலுக்குதான். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். நீங்களும் ‘வாடிவாசல்’ படத்துக்கு வெயிட் பண்றீங்களா?
News April 29, 2025
மைனாரிட்டி அரசு… மீண்டும் பிரதமரான மார்க் கார்னி

கனடா நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் மார்க் கார்னி பிரதமரானார். மொத்தமுள்ள 343 தொகுதிகளில் 168 இடங்களில் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 172 இடங்கள் லிபரல் கட்சிக்கு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது அவர்கள் ஆட்சி அமைக்கின்றனர்.