News August 19, 2024
காட்டில் மாயமான இந்தியர்கள் மீட்பு

நேபாளத்தில் காட்டில் மாயமான 3 இந்திய சுற்றுலாவாசிகள் 10 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர். நிதின், ராஷ்மி, தனிஷ் மற்றும் அவர்களது நேபாள வழிகாட்டி ஹரி பிரசாத் காரேல் ஆகியோர் நாகர்கோட் வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை 3 மணி அளவில் மாயமாகினர். இதையடுத்து போலீசுடன் இணைந்து உள்ளூர் மக்கள் தேடுதல் வேட்டையை தொடங்கினர். 10 மணி நேர தேடுதலுக்கு பிறகு நால்வரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Similar News
News July 9, 2025
மருமகளுக்கு Get-out.. மகளுக்கு கட்-அவுட்டா?

செளமியாவை அரசியலுக்கு வரக்கூடாது என்று நானே கூறியதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்றைய பாமக கூட்டத்தில் அவரது மூத்த மகள் காந்திமதியை மேடையேற்றி அழகு பார்த்தார் மருத்துவர். இதனால் மகளுக்கு ‘Ok’ மருமகளுக்கு ‘No’வா என்று கட்சியினரும், ‘இது வாரிசு அரசியல் இல்லையா’ என திமுகவினரும் கேட்கின்றனர். அதேநேரம், காந்திமதியின் மகன் முகுந்தனின் நுழைவே தந்தை – மகன் இடையே பிரச்னை உருவாக ஒரு காரணம்.
News July 9, 2025
தமிழ்நாடு குறித்து அறியப்படாத ‘6’ முக்கிய தகவல்கள்

எண்ணற்ற சிறப்புகளை கொண்ட ‘தமிழ்நாடு’ மாநிலத்தின் பெரிதும் அறிந்திடாத சில தகவல்களை மேலே உள்ள போட்டோக்களில் பாருங்க. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு சிறப்பு நமது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. மேலே கொடுக்கப்பட்டுள்ளவை கொஞ்சம் தான். இதுபோன்ற நமது மாநிலம் குறித்து உங்களுக்கு தெரிஞ்ச சில அரிய தகவல்களை கமெண்ட் செய்யவும். கெத்தாக சொல்லுங்க தமிழன்டா என!
News July 9, 2025
செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் தமிழர் நியமனம்

கடலூர், செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதற்கு, வடமாநில கேட் கீப்பரை பணியமர்த்தியதால் அவருக்கு மொழி தெரியாமல் பதிலளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை உள்ளூர் மக்கள் முன்வைத்தனர். இந்நிலையில், ஆனந்தராஜ் என்பவர் புதிய கேட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே விதிகளை முறையாக பின்பற்றுமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.