News August 17, 2025
2026 வெற்றிக்கு ராமதாஸிடம் பெரிய திட்டம்: GK மணி

குலதெய்வம் என கூறி கொண்டே சிலர் முதுகில் குத்துவதாக GK மணி விமர்சித்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், பாமகவுக்கு தற்போது சோதனை காலம் எனவும், அதிலிருந்து மீளும் ஐடியா அய்யாவுக்கு(ராமதாஸுக்கு) தெரியும் என்றும் கூறினார். மேலும், 2026 தேர்தலில் அதிக தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றால் மட்டுமே வன்னியர் மக்களுக்கு விடிவு காலம் எனக் கூறிய அவர், ராமதாஸிடம் அதற்கு பெரிய திட்டம் உள்ளது என்றார்.
Similar News
News August 17, 2025
ஒடிஷா முன்னாள் CM ஹாஸ்பிடலில் அனுமதி

ஒடிஷா முன்னாள் முதல்வரும், BJD கட்சி தலைவருமான நவீன் பட்நாயக் (78) ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வால் ஏற்படும் பிரச்னைகள் காரணமாக அட்மிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை குறித்த தகவல்களை ஹாஸ்பிடல் விரைவில் வெளியிடும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமானதால், டாக்டர்கள் அவரது வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்தனர்.
News August 17, 2025
தீபாவளி முன்பதிவு.. நாளை காலை 8 மணிக்கு ரெடியா..!

தீபாவளி அக். 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் புக்கிங் நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, அக். 17-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளையும், அக்.18-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளை மறுதினமும், அக்.29-ம் தேதிக்கு வரும் 20-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை காலை ரெடியா இருங்க நண்பர்களே!
News August 17, 2025
உக்ரைன் போரை தொடர ஐரோப்பிய நாடுகள் முயற்சி?

உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை ஃபிரான்ஸ், ஜெர்மனி, UK உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வரவேற்றுள்ளன. அதேவேளையில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தப்போவதில்லை எனவும், உக்ரைனை NATO அமைப்பில் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. ஆனால், நேட்டோவில் சேர்ந்தால், தனது நாட்டின் எல்லையில் ஐரோப்பிய படைகள் நிற்கும் என்று தான் புடின் போரை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.