News April 24, 2025
ரஜினி கதையில் சூர்யாவுக்காக செய்த மாற்றம்

‘பேட்ட’ படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘ரெட்ரோ’ கதையை உருவாக்கியதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். முதலில் இந்த கதை முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருந்ததாகவும், ஆனால், சூர்யா நடிப்பதாக மாறியதால், அக்கதையில் காதலை கலந்து தற்போதைய ‘ரெட்ரோ’-ஐ உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் மே 1-ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.
Similar News
News December 1, 2025
3 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நாளை(டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கனமழை பெய்துவரும் நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மேலும், பல மாவட்டங்களில் மழை நீடிப்பதால் அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 1, 2025
தோட்டக்கலைத் துறையில் திமுக ஊழல்

தோட்டக்கலைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ₹136 கோடியில் முறைகேடு நடந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகார் தொடர்பான செய்திகள் வெளிவந்தும் இன்னும் ஏன் CM ஸ்டாலின் பதிலளிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கம்போல் வெள்ளை பேப்பரை தூக்கிகாட்டி உருட்டாமல், செலவினங்கள் மற்றும் டெண்டர் நடைமுறைகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடவும் வலியுறுத்தியுள்ளார்.
News December 1, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக சென்னையில் நாளை(டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவள்ளூர், செங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை நீடிப்பதால் அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. உடனடி தகவலுக்கு WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.


