News May 14, 2024

மதியம் 1 மணி வரை மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

தோனி செய்வது சரியல்ல: புஜாரா

image

ஐபிஎல் பீவர் தொடங்கியுள்ள நிலையில் தோனி பேட்டிங் குறித்து Ex கிரிக்கெட் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார். தோனியால் ஒரு போட்டியைத் தனி ஒரு ஆளாக வென்று கொடுக்க முடியும் என்று கூறியதுடன், 8 அல்லது 9-வது வீரராக அவர் பேட்டிங் செய்வது சரியல்ல என கூறியுள்ளார். வெறும் 5, 10 பந்துகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, 25 முதல் 30 பந்துகளை எதிர்கொள்வது அணிக்கு நல்லது எனவும் அவர் பேசியுள்ளார்.

News March 13, 2026

பல வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: CM ஸ்டாலின்

image

OBC அல்லாத கிரீமி லேயர் நிர்ணயத்தை தெளிவுபடுத்தும் SC-ன் தீர்ப்பை தான் வரவேற்பதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி இனி சம்பள வருமானத்தை கிரீமி லேயருக்கான வணிகம் அல்லது சொத்து வருமானத்துடன் சமப்படுத்த முடியாது; வேலைவாய்ப்புத் துறைகளில் விரோதமான பாகுபாட்டை இத்தீர்ப்பு நிராகரிக்கிறது என கூறியுள்ளார். பல வருட போராட்டத்திற்குப் பிறகு OBC நீதிக்கு கிடைத்த தீர்க்கமான வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News March 13, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி பயப்படாதீங்க: பிரேமலதா

image

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு பிரச்னையை திறம்பட கையாள முடியும் என PM மோடி கூறியதை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தேவையின்றி பதட்டம் அடைய வேண்டாம் என தெரிவித்தார். அதுபோல, அனைவருக்கும் தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!