News August 17, 2025
25 மாவட்டங்களில் மழை வெளுக்கும்: IMD

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சென்னை, செ.பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், க.குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. உங்க ஊருல மழையா?
Similar News
News August 17, 2025
பொன்னியின் செல்வன் போல் திராவிட மாடல் ஆட்சி: ரகுபதி

அசல் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்குகளைச் செலுத்தினாலே திமுக வென்றுவிடும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். CM தொகுதியில் 9,000 போலி வாக்குகள் இருந்ததாக <<17426871>>அனுராக்<<>> தாக்கூர் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, தங்களுக்கு போலி வாக்காளர்கள் தேவையில்லை என்றார். பொன்னியின் செல்வனைப் போல் 2-ம் பாகம், 3-ம் பாகம் என திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
News August 17, 2025
டெய்லி எவ்வளவு நேரம் போன் யூஸ் பண்றீங்க’னு தெரியணுமா?

ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் நீங்க போன் யூஸ் பண்றீங்க’னு, எந்த App-ல் மூழ்கி போயிருக்கீங்க’னு தெரிஞ்சிக்கணுமா? உங்க போனிலேயே இந்த தகவலை தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன்களில் Settings-> Digital Wellbeing option சென்று பாருங்க. இது Iphone-களில் Screen Time app and the Attentive app என்ற பெயரில் இருக்கிறது. நீங்க எவ்வளவு நேர விரையும் பண்றீங்க என புரியும். SHARE IT.
News August 17, 2025
கீ கொடுத்தால் ஆடும் பொம்மை தேர்தல் ஆணையம்: ஸ்டாலின்

தேர்தல் ஆணையத்தை கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக BJP மாற்றியுள்ளதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலம் CPI மாநாட்டில் பேசிய அவர், ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தலையே கேலிக் கூத்தாக்கி விட்டதாக சாடினார். ECI ஆணையர் நியமனத்தில் சதி செய்கிறார்கள் என்றால், வாக்காளர் பட்டியலிலும் சதி செய்கிறார்கள் என கூறினார். BJP உடன் இணைந்து ECI வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக INDIA கூட்டணியினர் கூறி வருகின்றனர்.