News April 23, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News January 8, 2026
விஜய்யை மீண்டும் கூட்டணிக்கு அழைத்த தமிழிசை

அதிமுக – பாஜக கூட்டணியில் பாமகவை தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். விஜய் NDA-வில் சேரும் போது தான் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எப்படி NDA-வில் உள்ள கட்சிகளுக்கு திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு இருக்கிறதோ, அதே பொறுப்பு விஜய்க்கும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 8, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 8, மார்கழி 24 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்:6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
News January 8, 2026
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: புதிய தமிழகம்

மதுரையில் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் திராவிட மாயை ஆட்சிக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொள்ள வேண்டும், காசுக்கு ஓட்டு போடும் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தலா 2.5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் அடக்கம்.


