News April 2, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Similar News

News December 22, 2025

எச்.ராஜா நடித்த படம்.. கடுப்பான சேகர்பாபு

image

எச்.ராஜா நடித்துள்ள ‘கந்தன் மலை’ படம் குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, எடுத்த உடனேயே அந்த சாக்கடையை ஏன் கொண்டு வருகிறீர்கள் என அமைச்சர் காட்டமாக பதிலளித்தார். மேலும், தியேட்டர்களில் வெளியிடுவதற்கு கூட அந்த படத்திற்கு தகுதியில்லை. மதத்தால், இனத்தால் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் தீய சக்திகளின் முயற்சி தமிழகத்தில் எடுபடாது என்றும் தெரிவித்துள்ளார்.

News December 22, 2025

₹3,800 கோடியில் பாஜகவிற்கு மட்டும் ₹3,100 கோடி!

image

2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் ₹3,811 கோடி அளவிற்கு நன்கொடை பெற்றுள்ளன. நாடு முழுவதும் 9 தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் இவை வசூலிக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக மட்டும் ₹3,112 கோடி (82%) நன்கொடை பெற்றுள்ளது. காங்கிரஸ் ₹299 கோடி (8%), மற்ற கட்சிகள் ₹400 கோடி (10%) பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் தேர்தல் பத்திரங்களை SC தடை செய்த நிலையில், தற்போது ₹1,218 கோடி அதிக நன்கொடை பெறப்பட்டுள்ளது.

News December 22, 2025

ராசி பலன்கள் (22.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!