News November 29, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் காலை 10 மணி வரை திருவள்ளூர் மற்றும் சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
Similar News
News April 25, 2025
முதல் பந்திலேயே CSK-க்கு அதிர்ச்சி கொடுத்த ஷமி

சென்னை Chepauk மைதானத்தில் நடைபெற்று வரும் CSK vs SRH இடையிலான போட்டி, இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டியாகும். முதலில் பேட்டிங் செய்துவரும் CSK அணி, முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது. ஷமி வீசிய முதல் பந்திலேயே ர ரஷீத் அபிஷேக்கிடம் கேட்ச் கொடுத்து, வந்த வேகத்தில் நடையை கட்டினார். தற்போது ஒரு ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
News April 25, 2025
இந்துக்கள் அதை செய்யவே மாட்டார்கள்: மோகன் பகவத்

தற்போது நடப்பது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான சண்டை என பஹல்காம் தாக்குதல் குறித்து RSS தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். இப்போது நடக்கும் சண்டை மதங்களுக்கு இடையிலானது அல்ல எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நம் மக்கள் யாரும் எதிராளியின் மதத்தை கேட்டு கொன்றதில்லை எனவும், இந்துக்கள் ஒருபோதும் அதை செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News April 25, 2025
PAK-ஐ அடிக்க தமிழ்நாடே போதுமே..!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில், PAK-ன் நிதிநிலையை கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். அந்நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) ₹31.9 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால், மஹாராஷ்டிராவின் GSDP ₹42.67 கோடியாகவும், தமிழ்நாட்டின் GSDP ₹31.55 லட்சம் கோடியாக உள்ளது. மஹாராஷ்டிரா எனும் ஒற்றை மாநிலமே, PAK-ன் பொருளாதாரத்தை விட ₹10 லட்சம் கோடி அதிகமாக கொண்டுள்ளது.