News August 23, 2025
மூத்த அரசியல் தலைவர் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி (83) உடல்நலக்குறைவால் காலமானார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. நல்கொண்டா தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்வான சுதாகர் ரெட்டி, 2012 -19 வரை இந்திய கம்யூ., கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
Similar News
News January 21, 2026
RR, RCB-க்கு கெடு விதித்த BCCI

ஜன.27-ம் தேதிக்குள் தங்களது சொந்த மைதானங்களை உறுதிப்படுத்துமாறு RR, RCB அணிகளுக்கு BCCI காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18497857>>பெங்களூரு மைதானத்தில்<<>> கடந்த ஜூன் மாதம் கூட்டநெரிசலில் 11 பேர் பலியானதை அடுத்து, அங்கு இதுவரை ஒரு போட்டி கூட நடத்தப்படவில்லை. அதேபோல், கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தல் நடைபெறாததால், ஜெய்பூரில் போட்டி நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
News January 21, 2026
EPS-க்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த TTV

ஜெயலலிதாவின் நல்லாட்சியை NDA கூட்டணி சார்பில் TN-ல் மீண்டும் அமைத்திட நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் TN-க்கு புதிய வெளிச்சத்தை பாய்ச்ச வரலாற்று வெற்றியை படைப்போம் என்றும், கூட்டணியில் இணைந்த அமமுகவை மனதார வரவேற்று வாழ்த்திய EPS-க்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 21, 2026
பள்ளிகளுக்கு மீண்டும் 3 நாள்கள் விடுமுறை

பொங்கல் விடுமுறை முடிந்து இந்த வாரம் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டன. இனி எப்போது விடுமுறை வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ். ஆம்! ஜன.24, 25 (சனி, ஞாயிறு) மற்றும் குடியரசு தினமான ஜன.26 எனத் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது. எனவே, மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இப்போதே பயணத்தை திட்டமிடுங்கள்.


