News August 8, 2025

அரசியலமைப்பு புத்தகத்தை ராகுல் படிக்கணும்: அமித்ஷா

image

பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, அரசியலமைப்பு புத்தகத்தை சுமந்து செல்லும் ராகுல் அதனை திறந்து படிக்க வேண்டுமெனவும், அதில் இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை என்றும் கூறினார். பீகார் மக்களின் வேலைகளைப் பறிக்கும் வங்கதேசத்தினரைக் காப்பாற்ற ராகுல் விரும்புவதாகவும் விமர்சித்தார்.

Similar News

News August 8, 2025

அன்புமணி பொதுக்கூட்டத்துக்கு தடையில்லை: சென்னை HC

image

அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற தடையில்லை என சென்னை HC உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நாளை அன்புமணி தரப்பினர் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளனர். இதற்கு தடைவிதிக்க கோரி ராமதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த HC, ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு சிவில் கோர்ட்டை நாடவும் உத்தரவிட்டது. இந்நிலையில் ராமதாஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்யவுள்ளனர்.

News August 8, 2025

SHOCKING: 20 பேருக்கு HIV பரப்பிய 17 வயது பெண்

image

உத்தராகண்ட், நைனிடாலில் 17 வயது சிறுமி மூலம், 20 ஆண்களுக்கு HIV தொற்று <<14499346>>பரவிய செய்தி<<>>, மீண்டும் விவாதமாகியுள்ளது. இச்சிறுமி, போதைப் பழக்கத்துக்கு அடிமையானபோது HIV தொற்றும் ஏற்பட்டுள்ளது. போதைக்கு பணம் தேவைப்பட, உள்ளூர் ஆண்களுடன் இவர் உறவு கொண்டிருக்கிறார். இதனால் அவர் மூலம் 20 பேருக்கு HIV பரவியது. இந்நிலையில், போதைப்பழக்கம், HIV பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆக்டிவிஸ்டுகள் வலியுறுத்துகின்றனர்.

News August 8, 2025

எதிர்மறை எண்ணங்களை தடுப்பது எப்படி?

image

✦புத்துணர்ச்சி தரும் விஷயங்களை படிக்கலாம். ✦இனிமையான பாடல்களை கேட்கலாம். ✦தியானத்தில் ஈடுபடலாம். ✦புன்னகை தவழும் முகத்துடன் வலம் வாருங்கள். ✦முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்களுடன் இருங்கள். ✦முதியவர்கள் அல்லது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். ✦எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் சமாளிக்கலாம் என்பதில் உறுதி கொள்ளுங்கள்.

error: Content is protected !!