News April 2, 2024
டிரெண்டிங்கில் ‘புஷ்பா 2’ டீசர் ஹேஷ்டேக்

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தின் டீசர் வரும் 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘புஷ்பா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டும் என திரை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இந்நிலையில் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘புஷ்பா 2’ டீசர் என்ற ஹேஷ்டேக் X-ல் டிரெண்டாகி வருகிறது.
Similar News
News August 17, 2025
ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் பேசிய அஜித்: ஏ.ஆர்.முருகதாஸ்

நடிகர்கள் நேரத்திற்கு சூட்டிங் வருவதே பெரிய விஷயமாக மாறிப்போன நிலையில், நடிகர் அஜித் விபத்தில் அடிப்பட்டு “ஹாஸ்பிடலில்” சிகிச்சையில் இருந்தபோது ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் பேசியதாக ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். நான் உட்பட பல புதுமுக இயக்குநர்களை அஜித்தான் அறிமுகப்படுத்தினார். யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்துள்ளார். எளிதாக இந்த இடத்திற்கு அவர் வரவில்லை எனவும் தெரிவித்தார்.
News August 17, 2025
யார் பாமக தலைவர்: ராமதாஸா? அன்புமணியா?

விழுப்புரத்தில் இன்று(ஆக., 17) நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும், நிறுவனரும் ராமதாஸ் தான் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆக., 9-ல் மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இன்னும் ஓராண்டுக்கு அன்புமணி தான் தலைவர் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் தான்தான் தலைவர் என தீர்மானம் நிறைவேற்றுவதால் பாமகவினர் குழப்பத்தில் உள்ளனர்.
News August 17, 2025
அன்புமணியின் நியமனங்கள் செல்லாது: ராமதாஸ்

அன்புமணி மேலும் ஓராண்டுக்கு பாமக தலைவராக செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றியது செல்லாது என, ராமதாஸ் தலைமையிலான சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணியால் நியமிக்கப்பட்ட பதவி நியமனம், அறிவிப்புகள் செல்லாது என்றும், ராமதாஸால் நியமிக்கப்பட்டவர்கள் அப்படியே தொடர்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.