News April 7, 2024

அரை சதம் கடந்த ப்ரித்வி ஷா

image

மும்பைக்கு எதிராக இமாலய இலக்கை துரத்தும் டெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா, 40 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 234 ரன்கள் குவித்தது. பின்னர், களமிறங்கிய டெல்லி அணிக்கு அழுத்தம் அதிகமிருந்தாலும் நிதானமான ஆட்டத்தை ப்ரித்வி ஷா வெளிப்படுத்தினார். பின்னர், பும்ரா வீசிய யார்க்கரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

Similar News

News March 19, 2026

+2 மாணவி வன்கொடுமை: இளைஞர் அதிரடி கைது

image

தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கூறி 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சாயல்குடியை சேர்ந்த முனீஸ்வரனை செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் பிடித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளியை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி மாணவியின் உறவினர்கள் 9 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News March 19, 2026

‘ஆதவ் அர்ஜுனாவை உடனே நீக்குக’

image

தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியிலும் ஆதவ் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்துவதாக LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சாடியுள்ளார். விஷக்கிருமி போன்ற ஆதவ் அர்ஜுனா எந்த கட்சிக்கு சென்றாலும், அக்கட்சியின் தலைவரை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை அடைய நினைப்பார். எனவே, ஆதவ் அர்ஜுனா போன்ற புற்றுநோய் செல்களை உடனே நீக்க வேண்டும் என்று விஜய்க்கு மறைமுகமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

News March 19, 2026

‘அனிமேஷன்’ லெஜெண்ட் காலமானார்!

image

உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவர்ந்த ‘Anime’ கார்டூன் உலகின் லெஜெண்ட் சுடோமு ஷிபயாமா(84) காலமானார். நுரையீரல் புற்றுநோயுடன் நீண்ட காலம் போராடி வந்த அவர், மார்ச் 6-ம் தேதி உயிரிழந்ததாக ஜப்பானிய அனிமேஷன் நிறுவனமான ’Asia-Do’ அறிவித்துள்ளது. இவர் 1980-2004 வரையிலான காலகட்டத்தில், ‘டோரிமோன்’ மட்டுமின்றி குழந்தைகளுக்கான பல்வேறு அனிமேஷன் தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார். RIP

error: Content is protected !!