News April 7, 2024
அரை சதம் கடந்த ப்ரித்வி ஷா

மும்பைக்கு எதிராக இமாலய இலக்கை துரத்தும் டெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா, 40 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 234 ரன்கள் குவித்தது. பின்னர், களமிறங்கிய டெல்லி அணிக்கு அழுத்தம் அதிகமிருந்தாலும் நிதானமான ஆட்டத்தை ப்ரித்வி ஷா வெளிப்படுத்தினார். பின்னர், பும்ரா வீசிய யார்க்கரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
Similar News
News December 6, 2025
வரலாறு படைத்த தமிழகத்தின் தங்க மங்கைகள்!

மாலத்தீவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கேரம் போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. குறிப்பாக, தமிழக வீராங்கனை கீர்த்தனா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மகளிர் ஒற்றையர், இரட்டையர் என 2 பிரிவுகளிலும் அவர் தங்கம் வென்றார். இதேபோல், காசிமா, மித்ரா ஜோடி, இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்றுள்ளது. மகளிர் குழு போட்டியிலும் இவர்கள் மூவரும் தங்கம் வென்றுள்ளனர். சூப்பர்ல!
News December 6, 2025
பெற்றோர்களே, பிள்ளைகளிடம் இதை எதிர்பார்க்காதீங்க

சில Modern Parents தங்கள் பிள்ளைகளுக்கு தாங்கள்தான் Best Friend-ஆக இருக்க வேண்டும், பிள்ளைகள் தங்களிடம் அனைத்தையும் ஷேர் செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் பதின்ம வயது பிள்ளைகளுக்கென தனிப்பட்ட விஷயங்கள் இருக்கும். எனவே அவர்கள் உங்களிடம் அனைத்தையும் சொல்லமாட்டார்கள். இதனால் அவர்கள் வாழ்க்கை என்ன நடக்கிறது என துருவித்துருவி விசாரிக்க வேண்டாம். சிக்கலில் இருந்தால் மட்டும் உதவுங்கள் போதும்.
News December 6, 2025
திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றியது திமுக: BJP

தமிழகத்தில் இந்து தர்மம் மிகப்பெரிய சவாலுக்கு உள்ளாகியுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றியது திமுகதான் என்றும், தீபம் ஏற்ற அனுமதி கொடுத்திருந்தால் அமைதியாக முடிந்திருக்கும் எனவும் கூறியுள்ளார். தமிழகம் ஆன்மிக பூமி என்பதை நிரூபிப்போம் என கூறிய அவர், 2026-ல் திமுகவிற்கு மக்கள் பதில் சொல்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


